அஸ்ஸாலாமு அலைக்கும்!

Thursday, January 13, 2011

இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு

இந்து மதம்

சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான
அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள்
வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர்
அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை
வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின்
இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை.
இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா
(Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி
ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில்
வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார்.
ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக
ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த
குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக
சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?

ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து
என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத
நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய
என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள்
(1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள
பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது
தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின்
கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த
ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை.
எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள்
உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை.
எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு
எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக
விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக்
கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக்
கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து
மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர்.

இஸ்லாம்-ஒர் அறிமுகம்

''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால்
சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று
மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு
கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்

இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர்.
உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில்
உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின்
நிறுவனர் முஹமது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை
நபியுமாவார்.

இந்துமத விசுவாசத்தின் தூண்கள்

இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது
போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று
எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க
வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு
கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு
திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு
தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது
அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற
கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு
ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து
அல்லாதவராக ஆகிவிட்டார் என கூற வியலாது. இருப்பினும் இந்துக்களிடம்
பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம்
இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை

ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின்
கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர்
3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி
என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை)
இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே அவரே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப்
பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கம் உள்ள வேறுபாடுகள்

இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God's எனக்
கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக்
கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் 's ஆகும்.
இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க
வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன்,
சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக
இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண்
அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு,
பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது
என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் 's)
's நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும்
இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின்
கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே
(இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம்
அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும்
இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக
எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்)
அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள்
என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்

பகவத் கீதை 7:20

மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது
அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை
தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

உபநிஷங்கள்:

உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்

1. சந்தோக்ய உபநிஷம்

சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது
காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல்
பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி
செய்கிறது

குர்ஆன் கூறுகிறது

(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)

''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு
அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம்
கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை.
அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான
எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன்
112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)

நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்)
செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)

ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்)
பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான
ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

வேதங்களில் இறைக்கோட்பாடு

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித
வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)

"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது
வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி
மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே
வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற,
பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய
ஜீவன். 40:8

(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை
வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள்
மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம்
சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9

(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)

'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:

...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

ரிக் வேதம் (1:164:46)

மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர்
கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன்,
அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை
சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம்
குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை
2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால்
சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற
இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-
ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும்
ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)

விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது.
இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர்
கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு
கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம்
மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற
விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)

''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன்
மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)

படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.

(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)

கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)

எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள்
நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி-
ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ
எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர்
வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே,
இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக்
கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)

இஸ்லாத்தில் மலக்குகள்

மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால்
படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும்
செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை.
பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால்
பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:

ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு

மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

இந்து மதத்தில் மலக்குகள்

மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக்
காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக
வழிபடுவதுமுண்டு.

-


--
abumumien

Thursday, January 6, 2011

சிறைக் காவலரின் மனமாற்றம்! இஸ்லாத்தில் சரணடைந்தார்!!



----------

சிறைக் காவலரின் மனமாற்றம்! இஸ்லாத்தில் சரணடைந்தார்!!

டெர்ரி ஹோல்டுப்ரூக்ஸ்!
 
குவாண்டனமோ சிறைச்சாலையின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். அதற்குமுன் சில காலம் அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு வீரராகப் பணிபுரிந்தவர். குவாண்டனமோ சிறைக்கைதி எண் 590 அஹ்மதிடம் உரையாடும் நிமிடம்வரை இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை அறியாதவர். அல்லது இஸ்லாத்தைப் பற்றி தவறான விளக்கம் கொடுக்கப்பட்டவர்.
 
2004இல் குவாண்டனமோ சிறைச்சாலை பணிக்கு நியமிக்கப்பட்ட இவர், சிறைக் கைதிகளை அவரவர் அறைகளில் இருந்து வெளியேற்றி, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்தார். தவிர, சிறைச்சாலையின் அறைகளுக்குள் கைதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதையும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதையும் தடுக்கும் கூடுதல் பொறுப்பிலும் இருந்தார்.கம்பிக்குள் கைதிகள் படும் பாடு
 
இத்தகைய பணியின் காரணமாக டெர்ரிக்கு, பெரும்பாலும் கைதிகளின் அசைவுகளை நுணுக்கமாக கவனிக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது. பொழுது போக்கிற்காக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள கைதிகளிடம் வெளியில் நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். இத்தகைய சூழலில்தான் மொராக்கோவைச் சேர்ந்த அஹ்மது இராக்கிதி என்ற (எண் 590) கைதியுடன் உரையாடும் வாய்ப்பும் அவருக்கு அதிகமாகக் கிடைத்தது.
 
மனமாற்றத்தை ஏற்படுத்திய சிறைக்கைதி அஹ்மது!

கைதி எண் 590பயங்கர சித்ரவதைகள் அரங்கேறும் குவாண்டமோ சிறைச்சாலையில் அத்திப்பூத்தாற் போன்று அபூர்வமாக ஒரு சில சிறைக் காவலர்கள் கைதிகளிடம் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர் என்கிறார் அஹ்மது. சில காவலர்கள், இரவில் தனிமையைப் போக்க, தமது நேரங்களைக் கழிக்க, தூக்கத்தை விரட்ட இத்தகைய  பரஸ்பர உரையாடல்களைக் கைதிகளுடன் நடத்துகின்றனர்.

அரசியல், மதம், இசை மற்றும் பொதுவான தலைப்புகளில் இத்தகைய உரையாடல்கள் நடைபெறும் - நியூஸ்வீக் பத்திரிகைக்கு தமது மொராக்கோ இல்லத்திலிருந்து இ-மெயில் மூலம் எழுதிய மடலில் அஹ்மது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்நாளில் ஐந்து வருடங்கள் குவாண்டனமோ சிறையில் கழித்த அஹ்மது கடந்த 2007 இல் விடுதலை செய்யப்பட்டார்.
அஹ்மது கலந்துரையாடிய சில சிறைக் காவலர்கள் இஸ்லாம் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்து வியப்பிலாழ்ந்திருந்தாலும் எவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தனது வியப்பிலிருந்து மாறாத ஹோல்டுப்ரூக்ஸ் மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிக் கொண்டேயிருந்தார்.
"டெர்ரியிடம் காணப்பட்ட இத்தகைய ஆர்வமும் உண்மையினை அறிந்த மாத்திரத்தில் ஏற்றுக்கொண்ட துணிவுமே அவர் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தினைக் தழுவக் காரணமாய் இருந்தது" என்கிறார் அஹ்மது.

பல்வேறு பொதுவிஷயங்களைப் பற்றி பேசினாலும், இஸ்லாம் பற்றிய விபரங்களை சிறைக்கைதி அஹ்மத் கூறக் கூற வியப்பிலாழ்ந்து போனார் டெர்ரி. ஏனெனில் அன்றுவரை தாம் கேள்விப் பட்டிருந்த இஸ்லாமும், அஹ்மத் கூறிய இஸ்லாமும் முற்றிலும் மாறுபட்டிருந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இது பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உடனடியாக இஸ்லாம் தொடர்பான அனைத்து அரபிப் புத்தகங்களையும் மொழி பெயர்ப்புகளையும் வரவழைத்துப் படிக்கத் துவங்கினார்.

இடையிடையே தமக்குத் தோன்றும் கருத்துக்களையும் சந்தேகங்களையும் அஹ்மதிடம் அடுத்தடுத்த இரவுகளில் பகிர்ந்து கொள்வார். அதில் எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தொடர்புடைய புத்தகங்களையும் தேடிப் படிக்கலானார். பெரும்பாலும் நள்ளிரவில் நடக்கும் இத்தகைய உரையாடல்கள் தமது சிந்தனைகளை தூண்டிவிட்டதாகவும் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தெளிவினைத் தந்ததாகவும் இப்போது கூறுகிறார்.

ஒரு நாள் மாலைப் பொழுதில் சிறைக்கைதி அஹ்மத் உடன் ஏற்பட்ட மற்றொரு கலந்துரையாடலில் மனமுவந்து கூறும் ஷஹாதா என்ற ஒரு வரி வாக்குறுதி / பற்றுறுதியே ஒரு மனிதன் இஸ்லாத்தைத் தழுவிக்கொள்ளப் போதுமானதாகும் என்பதை அறிந்து கடும் வியப்பிலாழ்ந்தார். ["வணங்குதற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை; நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்" என்பதே ஷஹாதாவாகும்].

உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாத டெர்ரி, ஆர்வம் மேலிட ஒரு பேப்பரையும் பேனாவையும் சிறைக் கம்பிகளின் கீழே தள்ளினார். சிறைக்கைதி அஹ்மதிடம் கூறி ஆங்கிலத்திலும் அரபி உச்சரிப்பிலும் அதனை எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். எழுதி வாங்கிய பேப்பரோடு குவாண்டனமோ சிறைச்சாலைத் தரையில் அமர்ந்து சப்தமிட்டு ஷஹாதாவை முன்மொழிந்தார் டெர்ரி. ஆம்; டெர்ரி இஸ்லாத்தைத் தழுவியது குவாண்டனமோ சிறைக் கொட்டடியில்!

குவாண்டனமோ பயங்கரங்கள்! குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே! 

2005இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஹோல்டு ப்ரூக்ஸ் இக்கொடூரங்கள் பற்றிய தனது எண்ணங்களையும் அமெரிக்க ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார். கடந்த சில வாரங்களாக நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க இராணுவ வீரர்கள், விசாரணை அலுவலர்கள் கைதிகளிடம் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்வது பற்றி விவரித்துள்ளார். அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு அமெரிக்கச் சிறைக் காவலர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகக் கூறியுள்ளார். 

இத்துடன் நியூயார்க்கின் 9/11 சம்பவத்தில் புஷ்ஷின் அரசாங்கம் பெரும் சதியை அரங்கேற்றியுள்ளது என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மிகக் கொடியவர்கள் என்று பட்டப் பெயரிட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்படும் கைதிகளுக்கும், அவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை எனும் அளவிற்கு அவர்களின் நன்னடத்தை உள்ளது. இது பற்றி கடந்த 2002இல் பொறுப்பில் இருந்தபோதே தன் சக அலுவலர்களிடம் டெர்ரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவர்கள் ஏன் கைது செய்யப்பட வேண்டும். ஏன் இவர்கள் கீழ்த்தரமாகவும் கொடூரமாகவும் சித்ரவதை செய்யப்பட வேண்டும்? பின்பு ஏன் சில வருடங்களுக்குப் பின் குற்றமற்றவர் என்று வெளியேற்றப்பட வேண்டும்?

இத்தகைய கேள்விகள் குவாண்டனமோ சிறைச்சாலை அலுவலர்களிடையே ஆங்காங்கே உருப்பெற்று ஒரு சிலர் முதன் முறையாக அரசுக்கெதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.
விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிராண்டன் நீலி, பயங்கரவாதிகளை "உரிய" முறையில் விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் ஆர்வமுள்ளவர். குவாண்டனமோ சிறைச்சாலை தனது முதல் கைதியை வரவேற்றபோதே அங்கு பணியில் அமர்த்தப் பட்டவர்.

"பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.

குவாண்டனமோ சிறை பற்றிய உண்மைகளை சத்தியமார்க்கம்.காம் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. சத்தியமார்க்கம்.காமின் முந்தைய ஆக்கங்களிலிருந்து சில சுட்டிகள்: குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்!

வல்லரசுகளின் விளையாட்டில் தொலைந்து போன டாக்டர் ஆஃபியா சித்திக்கீ

இஸ்லாமோ ஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 6)

மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்கா சாதனை

விக்கிபீடியாவில் CIA, FBI செய்த தகவல் குளறுபடி அம்பலம்!

இஸ்லாம் பரிந்துரைக்கும் அழகிய தோற்றத்தில் தற்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட டெர்ரி, தனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் பெரும் குடிகாரனாகவும், மிகவும் சீர்கெட்ட நடத்தைகள் கொண்டு கழித்ததையும் எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுகிறார். கடந்த 2002இல் இராணுவத்தில் சேர்வதற்கு முன்பிருந்த சீர்கெட்ட வாழ்க்கையை இராணுவ ஒழுங்குமுறைகள் சீர்படுத்தவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

எந்த ஒரு வரையறையும் இன்றி, நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த தனது அவல வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கும் இவர், இராணுவம் தராத ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் தன்னுள் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

ஹிப்பிகளின் கலாச்சாரமான உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்ட உருவ அலங்காரங்களுடனும் பெரும் ஓட்டைகளை தனது காதில் இட்டு அதில் மரத்திலான தட்டுக்களை அலங்காரப் படுத்திக் கொண்டு திரிந்ததையும் நினைவுகூரும் இவர் "என் உடலில் இன்னும் எஞ்சியுள்ள இத்தகைய அசிங்கங்கள் என் கடந்த கால அவலத்தைப் பிறருக்கு எடுத்துக் கூற ஒரு சான்றாக இருக்கும்!" என்கிறார் உறுதியுடன்.

தமிழாக்கம்: அபூ ஸாலிஹா


Saturday, January 1, 2011

: கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!




bismillah


1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?

நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.

3. எதையும் பாராட்டும் போது?

மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.

4. பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?

சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

5. இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?

நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனைமட்டும் அழைப்பேன்.

6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்?

ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.

7. தும்மினால் நீ என்ன கூறுவாய் ?

தும்மினால் நான் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன்.

8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்ன கூறுவாய் ?

யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன்.

9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்ன கூறுவாய் ?

யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன்.

10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ?

அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.

11. நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?

வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.

12. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறுவாய் ?

லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.

13. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?

ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.

14. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும் ?

தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.

15. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?

ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.

16. நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் என்ன கூறவேண்டும் ?

நஊதுபில்லாஹ் - அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம் என்று கூறவேண்டும்.

17. திடுக்கிடக் கூடிய அளவில் ஏதேனையும் நீ அறியும் போது என்ன கூறுவாய் ?

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

நாம் அல்லாஹ்விடமே வந்தோம் மேலும் அவனிடமே திரும்புபவர்களாக உள்ளோம் என்று கூறுவேன்.

18. தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படுபவை ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின் னுஷூர்.

பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக.

19. ஆடை அணிகிற போது (கூறப் படும்) துஆ?

அல்ஹம்து லில்லாஹில் லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.

பொருள்: இந்த ஆடையானதை அவனுடைய உதவியொடு என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனைஎனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.

20. புத்தாடை அணியும் போது (கூறப்படும்) துஆ ?

அல்லாஹூம்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி

வகைரி மாஸூனிஅ லஹூ வ அஊதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனி அலஹூ.


பொருள் : யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது, நீதான் எனக்கு அதை அணிவித்தாய், அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் இன்னும் அதன்தீமை மற்றும் எதற்காக அதைத்தயார் செய்யப்பட்டதோ அந்தத் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாக்கத் தேடுகிறேன்.

21. தன்னுடைய ஆடையை அவர் கலையும் போது அவர் கூறவேண்டியது?

பிஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால்...

22. கழிவறையில் நுழைகின்ற போது துஆ?

(பிஸ்மில்லாஹி) அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக மினல் குபதி வல் கபாயிதி

பொருள் : (அல்லாஹ்வின் பெயரால) பிரவேசிக்கறேன் யாஅல்லாஹ் ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களி(ன்தீமையி)லிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

23. வுளுச் செய்யுமுன் கூறப்பட வேண்டியது?

பிஸ்மில்லாஹி

24. வுளுவை முடித்துக் கொண்ட பின் கூறப்பட வேண்டியது?

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ

பொருள் : வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் எனசாட்சி கூறுகிறென்.

25. வீட்டிலிருந்து புறப்படும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்த இல்லாபில்லாஹி.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து விட்டேன் மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும்.(நன்மை யானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

26. வீட்டினுள் நுழையும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி வலஜ்னா,வபிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினாதவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம் நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

27. பாங்கின் போது கூறப்படுபவை?

ஹய்ய அலஸ்ஸலாதி மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹி என்பது நீங்கலாக பாங்கு

கூறுபவர் போன்றே (செவியேற்பவரான) அவர் கூறுவார். (இவ்விரு வார்த்தைகளை செவியேற்கின்றபோது) லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி என்று அவர் கூறுவார்.

28. காலை மற்றும் மாலையில் கூறப்படுபவை?

அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹூ, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன்லா நபிய்ய பஃதஸூ.

பொருள் : புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே அவன் தனித்தவன்(அல்லாஹ்வின்) அருளும், சாந்தியும் அவர்களுக்கு பின் நபியில்லையே அத்தகையவர்களின் மீது உண்டாவதாக.

29. தூக்கத்தில் திடுக்கம் மற்றும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு துஆ?

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன்.

பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்குகளைக் கொண்டு - அவனின் கோபம், அவனின் தண்டனை அவனுடைய அடியார்களின் தீமை ஆகியவற்றிலிருந்தும் இன்னும் ஷைத்தான்களின் தூண்டுதல்கள் மற்றும் அவர்கள் என்னிடம் ஆஜராகுவதிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன்.

30. தொழுகை மற்றும் ஓதலில் (ஷைத்தானின்) ஊசலாட்ட(த்தை நீக்க) துஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி உம்முடைய இடப்பக்கம் மூன்று முறை துப்புவீராக.

31. நோயாளருக்காக (அவரை நலம் விசாரிக்கையில் ) ஓதும் துஆ?

லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.

பொருள்: எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் உங்களுக்கு பாவம்) பரிசுத்தமாகும்.

32. காற்று வீசுகின்ற போது ஓதும் துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஸ் அலுக கைரஹாஈ வ அஊது பிக மின்ஷர்ரிஹா.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.

33. இடி இடிக்கின்ற போது ஓதும் துஆ?

ஸூப்ஹானல்லதீ யுஸப் பிஹூர் ரஃது பிஹம்திஹி, வல்மலாயிகத்து மின் கீஃபதிஹி.

பொருள் : அவன் தூயவன், அவன் எத்தகையவனென்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் மலக்குகள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர்.

34. நோன்பு திறந்தபின் ...

தஹபழ் ழமஉ, வப்தல்லதில் உருக்கு, வதபத்தல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்.

பொருள் : தாகம் தனிந்தது, நரம்புகளும் நனைந்து விட்டன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைக்கும்.

35. உணவுக்கு முன்னர் துஆ?

உங்களில் ஒருவர் உணவு உண்டால் (1) பிஸ்மில்லாஹ் என்று கூறவும் அதன் ஆரம்பத்தில் கூற அவர் மறந்து விட்டால் (2)பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என அவர் கூறவும்.

பொருள் : (1) அல்லாஞ்வின் பெயரால் (உண்கிறேன்). (2) அதன் தொடக்கம் அதன் முடிவு ஆகியவற்றில் பிஸ்மில்லாஹ்.

36. உணவை உண்டு முடித்தபின் துஆ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஜகனீஹி, மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வத்தின்.

பொருள்: என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என்பலமின்றி எனக்கு இதை உண்ணக் கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.

37. உணவளித் தவருக்காக விருந்தாளியின் துஆ

அல்லாஹூம்ம பாரிக் லஹூம் ஃபீமா ரஜக்தஹூம், வஃக் ஃபிர்லஹூம் வர்ஹம் ஹூம்.

பொருள் : யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத்துச் செய்வாயாக, அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக, அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக,

38. நோன்பாளர் - அவரை எவராவது ஏசினால் அவர் கூற வேண்டியது?

இன்னீ ஸாயிமுன் இன்னீ ஸாயிமுன்.

பொருள் : நிச்சயமாக நான் நோன்பாளன், நிச்சயமாக நான் நோன்பாளன்.

39. கோபம் நீங்கதுஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள் : எறியப்பட்ட ஷைத்தானி(ன்தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

40. இணை வைப்பதிலிருந்து பயந்ததற்கு துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு,

வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு.


பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக நான், அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதிலிருந்து உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன், நான் அறியாதவற்றுக்காக உன்னிடம் பாவம் பொருத்தருளவும் தேடுகிறேன்.

41. அல்லாஹ் உமக்கு பறகத்துச் செய்வானாக என்று கூறியவருக்கு துஆ?

வ ஃபீக பாரகல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் உம்மிலும் பரகத்துச் செய்வானாக.

42. பிரயாணத்தில் செல்லுகையில் தக்பீர் மற்றும் தஸ்பீஹ் கூறுதல்?

நாங்கள் (மேட்டுப்பகுதியில்) ஏறுகின்ற போது (அல்லாஹூஅக்பர் எனத்) தக்பீர் கூறுவோராக, (பள்ளத்தில்) இறங்குகின்ற போது(ஸூப்ஹானல்லாஹ் எனக் கூறி) தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தோம் என ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

44. திடுக்கத்தின் போது கூறப்படுவது?

லாயிலாஹ இல்லல்லாஹூ

பொருள் :வணங்கப்படுபவன் அல்லாஹ்வையின்றி (வேறு) இல்லை.

45. அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாவிற்கு மிக சுலபமான மறுமையில் தராசு தட்டில் மிக கனமான இரு வார்த்தைகள்?

சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி சுபுஹானல்லாஹில் அளீம்.

பொருள் : பரிசுத்தமானவன் அல்லாஹ் புகழுக்குரியவன், மிகத் தூய்மையானவன் மகத்துவமிக்கவனாவான்.

----------------








--
--
abumumien