அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
2011 புத்தாண்டு சிந்தனைகள்.
Posted by PUTHIYATHENRAL
சிந்திக்கவும்: புத்தாண்டு கொண்டாட்டம் என்றபெயரில் உலகம் முழுவதும் வெடிக்கப்படும் வெடிகள் எத்தனையோ கோடி ரூபாய்களை தாண்டும். எத்தனையோ நாடுகளில் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். ஒருவேளை உணவு இல்லாமல் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்த சூழலில் இது போன்று பணத்தை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் வீணடிக்காமல் இந்த புத்தாண்டில் அது போன்ற மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த பணங்களை அனுப்பி கொடுத்தால் அதில் கொஞ்ச மக்களை காபாற்ற உதவும். இது ஒவ்வொரு மனித நேயம் உள்ள மனிதனின் கடமையாகும். இந்த புத்தாண்டில் இது போன்ற கொண்டாட்டங்களை தவிர்த்து. தினம்தினம் மருத்துவ மற்றும் உணவு வசதி இல்லாமல் சாகும் மக்களை பற்றி சிந்திப்போமாக, அவர்களது நல்வாழ்வுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று உறுதி எடுப்போம்...
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
--
--
abumumien
No comments:
Post a Comment