அஸ்ஸாலாமு அலைக்கும்!

Saturday, November 20, 2010

Fwd: மன்னரை வேதனையில் ஏற்ற தாழ்வா?



---------- 

அஸ்ஸலாமு அலைக்கும்,

     கபுருடைய வாழ்க்கை மற்றும் கபுருடைய தண்டனை மற்றும் மரணத்திற்கு பின்னால் உள்ள அனைத்தையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, அல்லாஹ் நீதியலர்ஹளுக்கு எல்லாம் நிதியாளன், கிருபையாலர்ஹளுக்கு எல்லாம் கிருபை யாளன்,  கபுருடைய வாழ்க்கை அல்லாஹ் நமக்கு தருவது. அது நரஹமோ அல்லது சொர்கமோ அங்கு நீதி வழங்க போவது அல்லாஹ் அல்லாஹ்மட்டும் தான்.

               அதனால் முதலில் இறந்தவர்ஹளுக்கு அதிஹா தண்டனை, பின்னால் இறந்தவர்ஹளுக்கு குறைந்த தண்டனை என்றல்லாம் நாம் பேச அனுமதி இல்லை. எனேன்றால்  தண்டனை வழங்குவது அல்லாஹ். அல்லாஹ் நன்கு அறிந்தவனாஹவும் மிக்க ஞானம் உள்ளவனாஹவும் இருக்கிறான்.

           அல்லாஹ் நாடினால் முந்தியவர்ஹளுக்கு 50000 வருட்கள் கொடுக்கும் தண்டனையை, பிந்தியவர்ஹளுக்கு 5 நிமிட்களில் கொடுத்து விடுவான். அதனால  இதை இதோடு விட்டு விடலாம். அல்லாஹ்வின் தண்டனையை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை.

         இது முழுக்க முழுக்க என்னுடைய கருது. தவறுஹல் இருந்தால் சுட்டிக்காட்டவும். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அப்துல்சமத்.

     

2010/11/20 hameetha sheik <hameethasheik@gmail.com>


அஸ்ஸலாமு அலைக்கும்,
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை குரான் வழியில் விளக்கினால் நன்றாக இருக்கும்

 
2010/11/18 muslim <tomuslim@gmail.com>

 

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

மண்ணறை வேதனை என்பது மனிதன் மரணித்தவுடன் அவருடைய ஆத்மா சந்திப்பதாகும். பொதுவாக இவ்வுலக வாழ்வில் மனிதன் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ப மரண தண்டனை அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும். சிறைத் தண்டனை, ஒரு நாளிலிருந்துத் தொடங்கி மாதங்கள், வருடங்கள், ஆயுள் தண்டனை என தண்டனை காலம் கழியும்வரை குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இவை குற்றவாளிகளின் குற்றங்களுக்கேற்ப மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆயுட்காலங்களில் வழங்கப்படும் தண்டனைகள்!

ஒருவர் தாம் செய்த குற்றத்திற்கான தண்டனையை இவ்வுலகில் அனுபவித்து விட்டால், மறுமையில் இன்னொரு முறை அவர் தண்டிக்கப்பட மாட்டார் என வேறு நபிமொழி அறிவிப்புகள் உள்ளதால், இவ்வுலகில் தண்டனை அனுபவித்தவர் அதேக் குற்றத்திற்காக மண்ணறையில் தண்டிக்கப்பட மாட்டார் என்றே விளங்க முடிகிறது.

மண்ணறை தண்டனையை இவ்வுலக தண்டனையுடன் ஒப்பிடாமல், மனிதன் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் அவரின் அமல்களுக்கேற்ப பெறப்படும் பரிசும், தண்டனையுமென விளங்க வேண்டும்.

இனி. கேள்விக்கு வருவோம்.

தூங்கவைக்கப்பட்ட குகைவாசிகள் பற்றி அல்லாஹ் குறிப்படும்போது முன்னூற்றொன்பது ஆண்டுகள் குகையில் தங்கினார்கள் எனவும், (அல்குர்ஆன் 18:25) பின்னர் அவர்கள் எழுந்து ''எவ்வளவு நேரம் தங்கினீர்கள்'' என ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டபோது ''ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதி தங்கியிருப்போம்'' என்று கூறிக் கொண்டதாகவும், (அல்குர்ஆன் 18:19) அல்லாஹ் கூறுகிறான். அதுபோல் மறுமையில் அல்லாஹ்வின் கேள்வி:

எத்தனை ஆண்டுகள் பூமியில் நீங்கள் தங்கியிருந்தீர்கள்? என (அல்லாஹ்) கேட்பான்.

"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணக்கெடுப்போரிடம் கேட்பாயாக!" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 23:112, 113)

இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட மண்ணறை ஆன்மா வாழ்க்கைப் பற்றி, முந்தி மரணித்தவர்களுக்கு நீண்டகாலம், பிந்தி மரணித்தவர்களுக்கு குறைந்த காலம் எனக் குறிப்பட்டு வித்தியாசப்படுத்திச் சொல்லுமளவுக்கு ஆதாரங்கள் எதுவுமிருப்பதாக நாமறியவில்லை! மனிதன் மரணித்த பின்னர் ஆன்மாவின் மண்ணறை வாழ்க்கை தண்டனை என்பது நித்திரை வாழ்க்கைப் போன்று இருக்கும் என்று குர்ஆன், சுன்னாவிலிருந்து விளங்க முடிகிறது.       

மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைந்து செல்வார்கள்.

"எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?" என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன் 36:51, 52)

மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படும் நாளில் தூக்கத்திலிருந்து எழுவதைப் போன்றே எழுப்பப்படுவார்கள்! ஆகவே, ஆரம்ப காலத்தில் மரணித்தவருக்கு அதிக காலம் தண்டனையை அனுபவித்துள்ளார், பிந்திய காலத்தில் பிறந்து வாழ்ந்து மரணித்தவருக்கு குறைந்த காலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்கிற பாகுபாடுகள் மண்ணறைவாசிகளிடையே ஏற்படும் வாய்ப்பில்லை!

நபிமொழிகள்

ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 1379, முஸ்லிம் 5436, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா)

''நாம் (காலத்தால்) பிந்தியவர்கள். மறுமையில் (தகுதியால்) முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர். என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 876, முஸ்லிம் 1549, நஸயீ, அஹ்மத்)

காலத்தால் முந்தியவர்கள், காலத்தால் பிந்தியவர்கள் என்கிற வித்தியாசம் பற்றியும், வாழ்ந்து மரணித்துவிட்ட முந்திய தலைமுறையினர் அவர்களுக்கான சிறப்புப் பற்றியும் கூறிக்கொள்வது இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கும். அதுபோல் மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் மண்ணறைகளுக்குச் சென்று நீங்கள் முந்தியவர்கள் நாங்கள் பிந்தியவர்கள் எனவும் கூறலாம்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள அடக்கஸ்தலங்களைக் கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி, ''அஸ்ஸலாமு அலைக்கும் யாஅஹ்லல் குபூர், யக்ஃபிருல்லாஹு லனா வலகும் அன்தும் ஸலஃபுனா நஹ்னு பில் அஸ்ர்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - திர்மிதீ 973)

السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ

(பொருள்:- மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். உங்களையும் எங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக. நீங்கள் முந்தி விட்டீர்கள். நாங்கள் பின்னால் வரக்கூடியவர்களாவோம்.)

மரணித்தவர்களுக்கும், மரணிக்காதவர்களுக்குமிடையே முந்தியவர்கள் பிந்தியவர்கள் என்கிற வித்தியாசம் மரணத்தைப் பற்றிய வித்தியாசமாக உள்ளன. அதுபோல் மரணித்தவர்களிடையே முந்தி மரணித்தவர்கள், பிந்தி மரணித்தவர்கள் என்ற வரலாற்றுப் பதிவுகளும் இவ்வுலக வாழ்க்கையின் சான்றுகளாகக் கொள்ளப்பட்டாலும் மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் மண்ணறை தண்டனையில் அதிக காலம், குறைந்த காலம் எனக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஏற்றத் தாழ்வு இருக்காது என்றே விளங்க முடிகிறது!

மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்க!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)



2010/11/16 Roshan Rosheen <roshanrosheen@yahoo.com>

 அஸ்ஸலாமு அழைக்கும்,
  "நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா? என்று கேட்கும் வழக்கமுடைய்யவர்களாக இருந்தார்கள் யாராவது கனவு கண்டு அதை கூறினால் அல்லாஹ் நாடியது நடக்கும் என்று கூறுவார்கள்.இவ்வாறே ஒருநாள் உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம் .அவர்கள் நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன் அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளை பிடித்து என்னை புனித பூமியொன்றுக்கு அழைத்து சென்றனர்.அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார் .நின்று கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன அவர் அதை கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது.இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார் இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காக்கி விட்டது.பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது .உடனே நான் இது என்ன என்று கேட்டேன் அதற்கு அவ்விருவரும் நடங்கள் என்றனர்.அப்படியே நடந்த பொது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார் அவரது தலைமாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர் அதை கொண்டு அவரது தலையை உடைத்தார் அவ்வாறே உடைக்கும் பொது பாறை உருண்டு ஓடி விட்டது அந்த பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறி விட்டது .மீண்டும் வந்து உடைத்தார் உடனே இவர் யார்?என கேட்டேன் அதற்கு அவ்விருவரும் நடங்கள் என்றனர்.எனவே நடந்தோம்.அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது அதற்கு கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்த பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள்(ஆனால் மேற்பகுதி குருகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை)நெருப்பு அணைந்ததும் பழைய பகுதிக்கு வந்து விட்டார்கள் அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக கிடந்தார்கள் நான் இவர்கள் யார் ?என்று கேட்டேன் அதற்கு நடங்க எனேக்கூரிடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம் அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் அவருக்கு முன்பாக கற்கள் கிடந்தன ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்று கொண்டிருந்தார் அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார் அக்கள் பட்டதும்   கரையேற  முயன்றவர் முன்னிருந்த இடத்துக்கு தள்ளபட்டார் இவ்வாறு அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க அவர் மீண்டும் பழைய இடத்திற்கு சென்றார். அப்போது நான் என்ன இது எனக் கேட்டேன் அதற்கு அவ்விருவரும் நடங்கள் எனேக்கொரிடவே நடந்த ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம் நான் இருவரிடமும் இரவு முழுவதும் என்னை சுற்றி காண்பித்தீர்களே அப்போது நான் கண்டவற்றை பற்றி விபரங்களை பற்றி கூறுங்கள் எனெக் கேட்டேன் .அதற்கு இருவரும் ஆம் முதல் தாடை சிதைக்க பட்டவரை பாரிதீரே அவர் பெரும் பொய்யார் அவர் போய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும் .நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் பார்த்தீரே அவருக்கு அல்லாஹ் குரானை கற்று கொடுத்தது அதை பயன்படுத்தாமல் இரவில் தூங்கி விட்டார் பகலில் அதை செயல்படுத்தவில்லை எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.அடுத்து ஒரு போனதில் சிலரை பார்த்தீரே அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் ஆற்றில் சிலரை பார்த்தீரே அவர்கள் வட்டி வாங்கி தின்றவர்கள் என்று கூறினார்கள் .
                                                                                                                     சமுரா இப்னு ஜுன்துப் (ரலி) -புஹாரி(1386 )   

இங்கு சொல்லபடு பொய்யர் குரான் ஓதி செயல் படுத்தாதவர் விபச்சாரம் செய்தவர் வட்டி வாங்கி தின்றவர்கள் இவர்கள் எலோருக்கும் மறுமை வரையில் கப்ரில் தண்டனை கொடுக்கபடுகின்றது முதல் மனிதர் சந்ததியில் இருந்து கியாமநாள் வரையுள்ள மனிதர் வரை குறிப்பிட்ட இந்த தப்பை செய்தவர்களுக்கு இந்த தண்டனை கொடுக்கப்படும் அப்படி என்றால் ஆரம்ப மனிதனுக்கு அதிக காலமும் இறுதியாக இன்த மனிதனுக்கு கப்ரில் குறைந்த  காலமும் தண்டனை கொடுக்கப்படுகின்றதே இது ஏற்ற தாழ்வு அல்லவா?

இந்த ஹதீஸுக்கு விளக்கம் தெரிந்த சஹோதரர்கள் விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.  


--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!"

--
"
--
abumumien

No comments:

Post a Comment