அஸ்ஸாலாமு அலைக்கும்!

Friday, November 26, 2010

Fwd: (TMP) சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ...





சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ...

காஸா நோக்கி சென்ற நிவாரணக் கப்பலில் இஸ்ரேலிய படையினர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 31, காஸா முற்றுகைக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, "மாவி மார்மரா" என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இஸ்ரேலிய கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பினுள் கப்பலை வழிமறித்தனர். இஸ்ரேலியரின் திடீர் தாக்குதல் காரணமாக, 20 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் சிறைப் பிடிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களும், கப்பல் பயணிகளும் துருக்கிய பிரஜைகள் ஆவர். அதனால் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு முறிந்தது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தாக்குதல் நடந்த போதிலும், துருக்கியினால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.

தற்போது "Kurtlar Vadisi - Filistin" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் "குர்த்ளர் வாடிசி" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

நன்றி செய்திகள்: கலையகம்.
--
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..
 
****************************************************************************************************************************************************
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" Ameen

   
abumumien

Wednesday, November 24, 2010

) இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்..

ஸ்மில்லா


------


இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்.

BISMILLAH
 1935-ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை எழுதினார்கள். இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்கும் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தை பிரசுரிக்கிறோம்.
                         நல்ல எண்ணத்துடனும் உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.         
            கண்ணியத்திற்குரிய மாணவனே! இன்னும் சற்று நேரத்தில், உக்களுக்கு அறிமுகமில்லாத சமூதத்துக்கு மத்தியிலும், உங்களுக்கு பழக்கமில்லாத மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள்.எனவே, நீங்கள் மிகச் சிறந்ததோர் உதாரணமாகத் திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
            உங்களிடத்தில் பெருமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அதுதான் உங்களது மனைவி. அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும் சந்தோசத்தையும் பெற்றுத் தருவாள்.
            நான் உங்கள் மீது கொண்ட  அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள்.
            உங்களது எல்லா விவகாரங்களையும் செயல்பாடுகளையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற நல்லுணர்வோடு அமைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயல்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத உள்ளங்கள் மறைத்து வைத்திருக்கக் கூடிய அனைத்தையும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். எனவே, அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே, இவ்விஷயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.
            உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள்.அவற்றைப் பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன்வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்படுத்தாதீர்கள். விட்டு விடதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகின்றான்;
            "மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி தவறச் செய்து விடும்." (ஸாத் : 26)
            அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன.அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்தேய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனைவிட அதிகமாக கடமையான விஷயங்களைப் பற்றிக் கூற விரும்பவில்லை. ஏனென்றால் அதுதான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.
            உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான காரியங்களை நிறைவேற்றுவதில் கழியுங்கள். ஃபர்ழான தொழுகைக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் பொழுது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
            அல்லாஹ்வை அதிகம் நினைவுக் கூறுங்கள். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், "உமது நாவு அல்லாஹ்வின் நினைவால் நனைந்து கொண்டே இருக்கட்டும்" என அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
            அல்குர்ஆனை விளங்கி ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அதுதான் உங்களுக்கான நோய் நிவாரணியாகும். உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அல்குர்ஆனைக் கொண்டே முடியுங்கள். ஏனென்றால், அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.
            நீங்கள் அங்கே பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உள்ளத்தைத் திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும், மாயைகளையும் காண்பீர்கள்.இவையெல்லாம் உங்களையும் மயக்கி மறுமையையும் மறக்கடிக்காமல் இருக்கட்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
            "(நபியே!) இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (தாஹா : 131)
            எனது மதிப்பிற்குரியவரே! அங்கு இருக்கிறவர்கள் அல்லாஹ் எங்களுக்கு ஹராமாக்கியுள்ளதை ஹலாலாகக் கருதுவர்கள். அந்த ஹராமான அம்சங்களைச் செய்வதில் சற்றேனும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே, நீங்கள் இச்சைகளுக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டாம். அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ளவும் வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியிலிருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதரவாகவும் இருக்காது.
            அடுத்து, நீங்கள் அங்குள்ள பெண்களுடன் தோழமை கொள்ள வேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் தனிப்பட்ட நட்பையோ, அல்லது உளரீதியிலான உறவையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இது ஏனையோருக்கு ஒரு குற்றமாக தென்பட்டால், உங்கள் மீது இரண்டு குற்றங்கள் ஏற்படும். ஏனென்றால், அதற்கான விளக்கத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.
            மதுபானத்தை நெருங்கவும் வேண்டாம். அவ்வாறு நெருங்குவதற்கு சூழலைக் காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராமான உணவினால் வளரும் உடம்பு நரகத்திற்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியைத் தவிர வேறொன்றுமிருக்காது.
            "இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்கள் மீது ஹராமாக்கி வைப்பார்."      (அல்அஃராப் : 157)
            இவ்வாறு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்றாலும் அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் என அஞ்சுகிறேன். எனவே, அல்லாஹ் உங்களுக்கு நல்லதை நாட வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..
 
**************************
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" Ameen

-- 


--
abumumien

Saturday, November 20, 2010

Fwd: மன்னரை வேதனையில் ஏற்ற தாழ்வா?



---------- 

அஸ்ஸலாமு அலைக்கும்,

     கபுருடைய வாழ்க்கை மற்றும் கபுருடைய தண்டனை மற்றும் மரணத்திற்கு பின்னால் உள்ள அனைத்தையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, அல்லாஹ் நீதியலர்ஹளுக்கு எல்லாம் நிதியாளன், கிருபையாலர்ஹளுக்கு எல்லாம் கிருபை யாளன்,  கபுருடைய வாழ்க்கை அல்லாஹ் நமக்கு தருவது. அது நரஹமோ அல்லது சொர்கமோ அங்கு நீதி வழங்க போவது அல்லாஹ் அல்லாஹ்மட்டும் தான்.

               அதனால் முதலில் இறந்தவர்ஹளுக்கு அதிஹா தண்டனை, பின்னால் இறந்தவர்ஹளுக்கு குறைந்த தண்டனை என்றல்லாம் நாம் பேச அனுமதி இல்லை. எனேன்றால்  தண்டனை வழங்குவது அல்லாஹ். அல்லாஹ் நன்கு அறிந்தவனாஹவும் மிக்க ஞானம் உள்ளவனாஹவும் இருக்கிறான்.

           அல்லாஹ் நாடினால் முந்தியவர்ஹளுக்கு 50000 வருட்கள் கொடுக்கும் தண்டனையை, பிந்தியவர்ஹளுக்கு 5 நிமிட்களில் கொடுத்து விடுவான். அதனால  இதை இதோடு விட்டு விடலாம். அல்லாஹ்வின் தண்டனையை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை.

         இது முழுக்க முழுக்க என்னுடைய கருது. தவறுஹல் இருந்தால் சுட்டிக்காட்டவும். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அப்துல்சமத்.

     

2010/11/20 hameetha sheik <hameethasheik@gmail.com>


அஸ்ஸலாமு அலைக்கும்,
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை குரான் வழியில் விளக்கினால் நன்றாக இருக்கும்

 
2010/11/18 muslim <tomuslim@gmail.com>

 

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

மண்ணறை வேதனை என்பது மனிதன் மரணித்தவுடன் அவருடைய ஆத்மா சந்திப்பதாகும். பொதுவாக இவ்வுலக வாழ்வில் மனிதன் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ப மரண தண்டனை அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும். சிறைத் தண்டனை, ஒரு நாளிலிருந்துத் தொடங்கி மாதங்கள், வருடங்கள், ஆயுள் தண்டனை என தண்டனை காலம் கழியும்வரை குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இவை குற்றவாளிகளின் குற்றங்களுக்கேற்ப மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆயுட்காலங்களில் வழங்கப்படும் தண்டனைகள்!

ஒருவர் தாம் செய்த குற்றத்திற்கான தண்டனையை இவ்வுலகில் அனுபவித்து விட்டால், மறுமையில் இன்னொரு முறை அவர் தண்டிக்கப்பட மாட்டார் என வேறு நபிமொழி அறிவிப்புகள் உள்ளதால், இவ்வுலகில் தண்டனை அனுபவித்தவர் அதேக் குற்றத்திற்காக மண்ணறையில் தண்டிக்கப்பட மாட்டார் என்றே விளங்க முடிகிறது.

மண்ணறை தண்டனையை இவ்வுலக தண்டனையுடன் ஒப்பிடாமல், மனிதன் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் அவரின் அமல்களுக்கேற்ப பெறப்படும் பரிசும், தண்டனையுமென விளங்க வேண்டும்.

இனி. கேள்விக்கு வருவோம்.

தூங்கவைக்கப்பட்ட குகைவாசிகள் பற்றி அல்லாஹ் குறிப்படும்போது முன்னூற்றொன்பது ஆண்டுகள் குகையில் தங்கினார்கள் எனவும், (அல்குர்ஆன் 18:25) பின்னர் அவர்கள் எழுந்து ''எவ்வளவு நேரம் தங்கினீர்கள்'' என ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டபோது ''ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதி தங்கியிருப்போம்'' என்று கூறிக் கொண்டதாகவும், (அல்குர்ஆன் 18:19) அல்லாஹ் கூறுகிறான். அதுபோல் மறுமையில் அல்லாஹ்வின் கேள்வி:

எத்தனை ஆண்டுகள் பூமியில் நீங்கள் தங்கியிருந்தீர்கள்? என (அல்லாஹ்) கேட்பான்.

"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணக்கெடுப்போரிடம் கேட்பாயாக!" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 23:112, 113)

இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட மண்ணறை ஆன்மா வாழ்க்கைப் பற்றி, முந்தி மரணித்தவர்களுக்கு நீண்டகாலம், பிந்தி மரணித்தவர்களுக்கு குறைந்த காலம் எனக் குறிப்பட்டு வித்தியாசப்படுத்திச் சொல்லுமளவுக்கு ஆதாரங்கள் எதுவுமிருப்பதாக நாமறியவில்லை! மனிதன் மரணித்த பின்னர் ஆன்மாவின் மண்ணறை வாழ்க்கை தண்டனை என்பது நித்திரை வாழ்க்கைப் போன்று இருக்கும் என்று குர்ஆன், சுன்னாவிலிருந்து விளங்க முடிகிறது.       

மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைந்து செல்வார்கள்.

"எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?" என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன் 36:51, 52)

மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படும் நாளில் தூக்கத்திலிருந்து எழுவதைப் போன்றே எழுப்பப்படுவார்கள்! ஆகவே, ஆரம்ப காலத்தில் மரணித்தவருக்கு அதிக காலம் தண்டனையை அனுபவித்துள்ளார், பிந்திய காலத்தில் பிறந்து வாழ்ந்து மரணித்தவருக்கு குறைந்த காலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்கிற பாகுபாடுகள் மண்ணறைவாசிகளிடையே ஏற்படும் வாய்ப்பில்லை!

நபிமொழிகள்

ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 1379, முஸ்லிம் 5436, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா)

''நாம் (காலத்தால்) பிந்தியவர்கள். மறுமையில் (தகுதியால்) முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர். என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 876, முஸ்லிம் 1549, நஸயீ, அஹ்மத்)

காலத்தால் முந்தியவர்கள், காலத்தால் பிந்தியவர்கள் என்கிற வித்தியாசம் பற்றியும், வாழ்ந்து மரணித்துவிட்ட முந்திய தலைமுறையினர் அவர்களுக்கான சிறப்புப் பற்றியும் கூறிக்கொள்வது இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கும். அதுபோல் மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் மண்ணறைகளுக்குச் சென்று நீங்கள் முந்தியவர்கள் நாங்கள் பிந்தியவர்கள் எனவும் கூறலாம்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள அடக்கஸ்தலங்களைக் கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி, ''அஸ்ஸலாமு அலைக்கும் யாஅஹ்லல் குபூர், யக்ஃபிருல்லாஹு லனா வலகும் அன்தும் ஸலஃபுனா நஹ்னு பில் அஸ்ர்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - திர்மிதீ 973)

السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ

(பொருள்:- மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். உங்களையும் எங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக. நீங்கள் முந்தி விட்டீர்கள். நாங்கள் பின்னால் வரக்கூடியவர்களாவோம்.)

மரணித்தவர்களுக்கும், மரணிக்காதவர்களுக்குமிடையே முந்தியவர்கள் பிந்தியவர்கள் என்கிற வித்தியாசம் மரணத்தைப் பற்றிய வித்தியாசமாக உள்ளன. அதுபோல் மரணித்தவர்களிடையே முந்தி மரணித்தவர்கள், பிந்தி மரணித்தவர்கள் என்ற வரலாற்றுப் பதிவுகளும் இவ்வுலக வாழ்க்கையின் சான்றுகளாகக் கொள்ளப்பட்டாலும் மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் மண்ணறை தண்டனையில் அதிக காலம், குறைந்த காலம் எனக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஏற்றத் தாழ்வு இருக்காது என்றே விளங்க முடிகிறது!

மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்க!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)



2010/11/16 Roshan Rosheen <roshanrosheen@yahoo.com>

 அஸ்ஸலாமு அழைக்கும்,
  "நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா? என்று கேட்கும் வழக்கமுடைய்யவர்களாக இருந்தார்கள் யாராவது கனவு கண்டு அதை கூறினால் அல்லாஹ் நாடியது நடக்கும் என்று கூறுவார்கள்.இவ்வாறே ஒருநாள் உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம் .அவர்கள் நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன் அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளை பிடித்து என்னை புனித பூமியொன்றுக்கு அழைத்து சென்றனர்.அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார் .நின்று கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன அவர் அதை கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது.இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார் இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காக்கி விட்டது.பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது .உடனே நான் இது என்ன என்று கேட்டேன் அதற்கு அவ்விருவரும் நடங்கள் என்றனர்.அப்படியே நடந்த பொது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார் அவரது தலைமாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர் அதை கொண்டு அவரது தலையை உடைத்தார் அவ்வாறே உடைக்கும் பொது பாறை உருண்டு ஓடி விட்டது அந்த பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறி விட்டது .மீண்டும் வந்து உடைத்தார் உடனே இவர் யார்?என கேட்டேன் அதற்கு அவ்விருவரும் நடங்கள் என்றனர்.எனவே நடந்தோம்.அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது அதற்கு கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்த பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள்(ஆனால் மேற்பகுதி குருகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை)நெருப்பு அணைந்ததும் பழைய பகுதிக்கு வந்து விட்டார்கள் அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக கிடந்தார்கள் நான் இவர்கள் யார் ?என்று கேட்டேன் அதற்கு நடங்க எனேக்கூரிடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம் அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் அவருக்கு முன்பாக கற்கள் கிடந்தன ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்று கொண்டிருந்தார் அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார் அக்கள் பட்டதும்   கரையேற  முயன்றவர் முன்னிருந்த இடத்துக்கு தள்ளபட்டார் இவ்வாறு அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க அவர் மீண்டும் பழைய இடத்திற்கு சென்றார். அப்போது நான் என்ன இது எனக் கேட்டேன் அதற்கு அவ்விருவரும் நடங்கள் எனேக்கொரிடவே நடந்த ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம் நான் இருவரிடமும் இரவு முழுவதும் என்னை சுற்றி காண்பித்தீர்களே அப்போது நான் கண்டவற்றை பற்றி விபரங்களை பற்றி கூறுங்கள் எனெக் கேட்டேன் .அதற்கு இருவரும் ஆம் முதல் தாடை சிதைக்க பட்டவரை பாரிதீரே அவர் பெரும் பொய்யார் அவர் போய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும் .நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் பார்த்தீரே அவருக்கு அல்லாஹ் குரானை கற்று கொடுத்தது அதை பயன்படுத்தாமல் இரவில் தூங்கி விட்டார் பகலில் அதை செயல்படுத்தவில்லை எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.அடுத்து ஒரு போனதில் சிலரை பார்த்தீரே அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் ஆற்றில் சிலரை பார்த்தீரே அவர்கள் வட்டி வாங்கி தின்றவர்கள் என்று கூறினார்கள் .
                                                                                                                     சமுரா இப்னு ஜுன்துப் (ரலி) -புஹாரி(1386 )   

இங்கு சொல்லபடு பொய்யர் குரான் ஓதி செயல் படுத்தாதவர் விபச்சாரம் செய்தவர் வட்டி வாங்கி தின்றவர்கள் இவர்கள் எலோருக்கும் மறுமை வரையில் கப்ரில் தண்டனை கொடுக்கபடுகின்றது முதல் மனிதர் சந்ததியில் இருந்து கியாமநாள் வரையுள்ள மனிதர் வரை குறிப்பிட்ட இந்த தப்பை செய்தவர்களுக்கு இந்த தண்டனை கொடுக்கப்படும் அப்படி என்றால் ஆரம்ப மனிதனுக்கு அதிக காலமும் இறுதியாக இன்த மனிதனுக்கு கப்ரில் குறைந்த  காலமும் தண்டனை கொடுக்கப்படுகின்றதே இது ஏற்ற தாழ்வு அல்லவா?

இந்த ஹதீஸுக்கு விளக்கம் தெரிந்த சஹோதரர்கள் விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.  


--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!"

--
"
--
abumumien

Friday, November 19, 2010

Fwd: ஸலாம் கூறுவதன் சிறப்பு







அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

இஸ்லாத்தில் சிறந்தது:

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து ஸலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),

ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236


''இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

(நூல்: புகாரி, முஸ்லிம்)


அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுதல்

அல்லாஹ் கூறுகிறான் :

"உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்"

-  (அல்குர்ஆன் 4 : 86)

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் ஸலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

 
ஒரு
முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்முக்கு செய்ய வேண்டிய கடமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு
முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்­முக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை ஸலாமுக்குப் பதிலுரைப்பது. நோயாளியை நலம் விசாரிப்பது. ஜனாஷாவை பின் தொடர்வது. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. துமமுபவருக்கு பதிலுரைப்பது ஆகியவை ஆகும்.

அறிவிப்பவர் : அபூ
ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி (1240)


முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -

"நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "அஸ்ஸலாமு அலைக்கும் " என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார்.  நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் "(இவருக்கு) இருபது (நன்மைகள்)" என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்‎" என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் "(இவருக்கு) முப்பது (நன்மைகள்)" என்று கூறினார்கள்."

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹசைன் (ரலி)

நூல் : அபூ தாவூத் (4521)


'ஸலாம்' எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், 'சலாம்' எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)

ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, 5175


'நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக  ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ,அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்" என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)

நூல் : முஸ்லிம், ரியாளுஸ்ஸாலிஹீன்  848


 'மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். 'ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி)

ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849


வீடுகளில் நுழையும் முன் ஸலாம் கூறுவதன் அவசியம்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

"நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.                                                                                       - (அல்குர்ஆன் 24 : 61)


ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).                     - (அல்குர்ஆன் 24 : 27)


 "மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் :  அனஸ் (ரலி)

நூல் :  திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 861


"நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்."

அறிவிப்பவர் : அனஸ் (ரலி­)
நூல் : புகாரி (6244)


ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்பவரே சிறந்தவராவார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் " மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முத­ல் ஸலாம் கூறுபவரே ஆவார்"
அறிவிப்பவர் : அபூ உமாமா (
ரலி­)

நூல் : அபூதாவூத் (4522)

 

 "இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. "அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)" என நபி(ஸல்) பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்  858


''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூ அல் அன்ஸாரி (ரலி­)

நூல் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூத்


 ''இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து 'ஸலாம்" கூறட்டும். (மற்றொருவர்) பதில் 'ஸலாம்" கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் 'ஸலாம்" கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக 'ஸலாம்" கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்"

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)

நூல் : அபூ தாவூத்


சந்திக்கும் போது முஸாஃபஹா செய்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "இரண்டு முஸ்­ம்கள் சந்தித்து முஸாஃபஹா செய்தால் அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் அவர்களுடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (
ரலி­)

நூல் : திர்மிதி (2651)

சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் " உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்தோடு சந்திப்பது உட்பட நற்காரியங்களில் எதனையும் இழிவாகக் கருதிவிடாதே"
அறிவிப்பவர் : அபூதர் (
ரலி)

நூல் : முஸ்லி­ம் (4760)


ஸலாம் கூறுவதின் முறைகள்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முத­ல்) ஸலாம் சொல்லட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) 

நூல் : புகாரி (6231)



சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்


அனஸ் (
ரலி­) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்
நூல் : புகாரி ( 6247 )

அலைக்கஸ் ஸலாம் என்று கூறுவது கூடாது


" நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அலைக்கஸ் ஸலாம் யாரசூலல்லாஹ்" என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் " அலைக்கஸ் ஸலாம் " என்று கூறாதே. ஏனென்றால் " அலைக்கஸ் ஸலாம் " என்பது இறந்தவர்களின் ஸலாம் ஆகும் " என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸ‎ýலைம் (ரலி­)

நூல் : திர்மதி (2646)

யூதர்களைப் போல் ஸலாம் கூறுதல் கூடாது


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் " யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் கூறுதலாகிறது (வார்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) மூலமும். சைக்கினையின் மூலமும் ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (
ரலி­)

நூல் : அஸ் ஸ‎ýனனுல் குப்ரா பாகம் : 6 பக்கம் : 92

தூரத்தில் உள்ளவர்களுக்கு கைகளால் சைக்கினை செய்து மெதுவாக ஸலாம் கூறுதல்


பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாச­ல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி­) 

நூல் : திர்மிதி (2621)


ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். " உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி­) 

நூல் : அபூ தாவூத் (4523)


மேற்கண்ட ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனத்தி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

1.    இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.
2.    ஒரு முஸ்­ம் மற்றொரு முஸ்­முக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றும் ஸலாம் கூறுதலாகும்.
3.    ஒரு சகோதரரை சிரித்த முகத்துடன் சந்திப்பதும். நற்காரியங்களில் உள்ளதாகும்.
4.    முஸாஃபஹா என்பது ஒருவரைச் சந்திக்கும்போது அவருடைய வலது கரம் பற்றுவதாகும். ஒரு கையினால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும். இரு கரம் பற்றிக் குலுக்குவது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
5.    இருவர் சந்திக்கும் போது முத­ல் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்குரியவராவார்.
6.    நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு ஸலாம் கூறுவதினால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
7.    சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் கூறவேண்டும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும். பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறலாம்.
8.    ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.
9.    "அஸ்ஸலாமு அலைக்க" என்று கூறுவது கூடாது., இது இறந்தவர்களுக்குரியதாகும்.
10.    வார்த்தைகள் இல்லாமல் ஒருவரைச் சந்திக்கும் போது முன்கைகளாலும் தலையைத் தாழ்த்தியும் சைக்கினையின் மூலமும் ஸலாம் கூறக்கூடாது. இது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய கலாச்சாரம் ஆகும்.
11.    தூரத்தில் உள்ளவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும் " என்று வார்த்தைகளைக் கூறி கைகளை அசைத்து ஸலாம் கூறலாம்.
12.    ஒருவருக்கு ஸலாம் கூறும் பொழுது அவருக்கு மற்றொரு முறை ஸலாம் கூறலாம். இவ்வாறு மூன்று முறை கூறிக்கொள்ளலாம்.


மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -

இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.

ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.


___________
by

Blog: The Religion In The Sight Of Allah
Link: http://hakkem.blogspot.com



-- 

--
abumumien

சுவனத்தை வெறும் முப்பது பொற்காசுகளுக்கு விற்பனை செய்த ஷைகு மத்யன் அஹமது ? ? ?






SOCIAL NETWORKஒரு சகோதரர் முற்படுத்திய செய்தியை நாம் உங்களின் பார்வைக்கும் முற்படுத்துகிறோம்

இதுதான் சூஃபித்துவம் (தர்காஹ் மற்றும் தப்லீக்வாதிகளின் சூராக்கள்)

 


 

ஷைக்கு மத்யன் அஹ்மத் அவர்களும் பிரபல சூபி மகானாவர்கள். ஒருமுறை அவரிடத்தில் ஒரு பெண் வந்து முப்பது பொற்காசுகளை கொடுத்து எனக்கு மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்றாள். அதற்கவர் இத்தொகை போதாது என்றார். இதைத்தவிர வேறெதுவும் தன்னிடம் இல்லையென்று அவள் கூறியதும் சிறிது யோசித்துவிட்டு பின்னர் அவள் சுவர்க்கம் செல்வதற்குத் தான் பொறுப்பென ஒப்புக்கொண்டார். பின்னர் அப்பெண் இறந்ததும் அவளின் உறவினர்கள் இவ்வொப்பந்தம் செல்லாது என்று கூறி அப்பணத்தை கேட்டு ஷைகுவிடம் வந்தார்கள். அன்றிரவு அப்பெண் அவர்களின் கானவில் வந்து ஷைகு அவர்கள் வாக்குறுதியளித்தவாறு எனக்கு சொர்க்கத்தை தந்துவிட்டார்கள் எனவே அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்றாள்! 

(ஆதார நூல் தபகாத்துஷ ஷஃரானி 2-102)



இந்த தீமைகளையெல்லாம் துடைத்து எடுக்க முற்படும்போது சுன்னத் ஜமாஅத்தை எதிர்கிறான், தப்லீக் ஜமாஅத்தை எதிர்க்கிறான் என்று ஆங்காங்கே கோஷங்கள் எழுகின்றன! இதையெல்லாம் தடுப்பது கூடாதா? அந்த அல்லாஹ்தான் நம் சமுதாயத்தை இந்த கட்டுக்கதைகளிடமிருந்து காப்பாத்தனும்!

--
கப்ருவணங்கிகள் உங்களுக்கு ஃபாத்திஹா ஓதுவதற்கு முன் கத்தம் ஃபாத்திஹா மற்றும் இன்னபிர அநாச்சாரங்களை தடுத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள்!


--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.



--
abumumien